கோவையில் வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

வண்டிப்பாதையை நிலவியல் வண்டிப்பாதையாக மாற்றம் செய்து தராமல் இருந்த வட்டாட்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதி இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் ஜே.கிருஸ்ணாபுரம் வருவாய் கிராமத்தில் பட்டா நிலத்தில் உள்ள வண்டிபாதையை அப்பகுதி விவசாயிகள் நீண்ட ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வண்டிப்பாதையை நிலவியல் வண்டிப்பாதையாக மாற்றம் செய்து தரக்கோரி தெற்கு வருவாய் கோட்டாச்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அப்பாதையை நிலவியல் வண்டிப்பாதையாக மாற்ற சாத்தியம் இல்லை என கூறியதால், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டபடவில்லை என தெரிகிறது.



இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், தெற்கு வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து கண்ட முழக்கங்களை எழுப்பி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உரிய அனுமதி இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...