கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலையை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

குறிச்சி பகுதியில் மிதிவண்டி பாதை, நடை பாதை, உணவகங்கள், அலங்கார குடைகள், சிறுவர் விளையாட்டு திடல், பாரம்பரிய சிலைகள் என ஏராளமானவை அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம், குறிச்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 52.16 கோடி மதிப்பில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழர் பாரம்பரிய சிலைகள், உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மொத்த மதிப்பு 57.66 கோடி ஆகும்.

இதன் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி அறிவுசார் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன் உட்பட பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இவற்றைத் திறந்து வைத்ததும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அறிவுசார் மையத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டனர்.



மேலும் அறிவு சார் மையத்தில் இருக்கும் ஸ்மார்ட் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திரையில் மாவட்ட ஆட்சியர் Best Wishes என எழுதி அவரது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



முன்னதாக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கும் நேரத்தில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலைக்காட்சிகள் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் இயங்கவில்லை.



இதனால் முதல்வரின் நேரலையை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது செல்போனில் பார்த்தனர்.



சிறிது நேரம் கழித்து தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு நேரலை இணைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



அதனைத் தொடர்ந்து குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இந்நிகழ்வில் பலூன்கள் பறக்க விடப்பட்டது. மேலும் அங்குத் திரண்டிருந்த பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை முன்பு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த குறிச்சி பகுதியில் மிதிவண்டி பாதை, நடை பாதை, உணவகங்கள், அலங்கார குடைகள், சிறுவர் விளையாட்டு திடல், பாரம்பரிய சிலைகள் என ஏராளமானவை அமைக்கப்பட்டுள்ளது.



அதனைத் தொடர்ந்து உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையத்தை பார்வையிட்டனர்.



இங்கு 3D முப்பரிமாண காணொளி, கோவை மாநகர சிறப்புகளை விளக்கும் வகையில் 3D காணொளி, குழந்தைகள் விளையாட்டு 3D காணொளி ஆகிய கட்டமைப்புகள் ஜிப் லைன், இரண்டு பேர் ஓட்டும் சைக்கிள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.



இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியாரும் மாநகராட்சி ஆணையாளரும் இரண்டு பேர் ஓட்டும் சைக்கிளை ஓட்டி பார்த்து மகிழ்ந்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...