கள்ளுக்கடைக்கு அரசு அனுமதிக்க வேண்டும் - பொள்ளாச்சியில் ER.ஈஸ்வரன் பேட்டி

பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.


கோவை: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியில் உள்ள தீரன் சின்னமலை அரங்கில் மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கலந்து கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை முழுமையாக மூட வேண்டும், கள் மதுபான பொருள் அல்ல, மற்ற மாநிலங்களை போல விவசாயிகள் நலன் கருதி கள் இறக்க அனுமதி வழங்கி மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர், கொள்முதல் விலையை ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள், ஆனால் தேவை அதிகரிக்கிறது, மற்ற மாநிலங்களில் இருந்து தமிழத்தில் பால் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர், ஆவின் ஏன் வாங்க முடியாது பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் நிலை கட்டணம் உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது, எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...