பீளமேட்டில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 28வது ஆண்டு விழா

சங்கத்தின் சார்பில் ஒரு ஆண்டிற்குள் 2 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டி பொதுமக்கள், ஏழை மக்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும். ஒப்பந்ததாரர்கள் பதிவு 3 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 28வது ஆண்டு விழா பீளமேடு கொடிசியா அரங்கத்தில் நடந்தது. இதில் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை தலைவர் ராஜகோபால், துணை செயலாளர் மைக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சினிமா நடிகர் சதீஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

சங்கத்தின் சார்பில் ஒரு ஆண்டிற்குள் 2 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டி பொதுமக்கள், ஏழை மக்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும். ஒப்பந்ததாரர்கள் பதிவு ஒரு ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கப்படுகிறது. இந்தநிலையில் அதனை 3 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். பொதுப்பணித்துறையில் உள்ள நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டாக கோரிக்கை விடப்பட்டது. இந்த ஆண்டு முதல் பதிவு பணியை 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சியில் புதுப்பித்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் உள்ள பூங்காக்களில் மாநகராட்சி கமிஷனர் அனுமதி பெற்று சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக இலவசமாக கண், பல் பரிசோதனை, சிகிச்சை முகாம் நடத்த அனுமதி பெறப்பட்டது. சுமார் 90 மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டு கண், பல் சிகிச்சை முகாம் நடத்தப்படும்.

சங்க உறுப்பினர்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் மருத்துவ காப்பீடு 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். வரும் காலங்களில் அனைவருக்கும் டெண்டர் என்ற நடைமுறை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சமமான முறையில் வேலை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சங்க உறுப்பினர்கள் அனைத்து அரசு துறைகளிலும் மொத்தமாக 1500 கோடி ரூபாய் வரை பணிகள் நடத்தி வருகிறார்கள். வரும் 3 ஆண்டுகளில் 2500 கோடி ரூபாய்க்கு பணிகள் அதிகரிக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் சங்கத்தின் சார்பில் செய்து தரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பாட்டு, நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 28 ம் ஆண்டு விழாவில் சங்க தலைவர் உதயகுமார் பேசினார். அருகில் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...