பல்லடம் அரசு பேருந்து பணிமனை முன்பு கொட்டும் மழையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பல்லடம் நகர நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க கூட்டுக்குழு, சிஐடியு, ஏஐடியுசி கூட்டுக்குழு, ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் ஆகியோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணம், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 96 மாத அக விலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழில் சங்கங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பல்லடம் நகர நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க கூட்டுக்குழு, சிஐடியு, ஏஐடியுசி கூட்டுக்குழு, ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் ஆகியோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மண்டல தலைவர் ரவீந்திரன், பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, வழக்கறிஞர் பொன்னுசாமி, தமிழ்நாடு பழனிச்சாமி, நகர பொருளாளர் தர்மர், கிளைச் செயலாளர் ரவிபிரபு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...