இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்த சசிக்குமார் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அபுதாஹிர் என்பவரை கோட்டைமேடு பகுதியில் இருந்து போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அபுதாஹிரை கண்டுபிடித்து தருமாறு அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து நீதிபதி வேலுச்சாமி சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அபுதாஹிர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் அபுதாஹிரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். 

தொடர்ந்து அபுதாஹிரை வருகிற ஏப்ரல் 5ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...