சசிகுமார் கொலை வழக்கில் பொய் வழக்கு புனைந்து அபுதாஹிர் என்பரை சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்துள்ளாதாக கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் கோவை சாய்பாபா காலணியை சேர்ந்த அபுதாஹிர் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்தனர். ஆனால் அபுதாஹிர் மீது பொய் வழக்கு புனைய பட்டுள்ளதாகவும், சட்ட ரீதியான கைது நடவடிக்கையில் டி.எஸ்.பி பாலமுருகன் ஈடுபடவில்லை என கூறி பாலமுருகனை கண்டித்து அபுதாஹிர் உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்தனர்.