தாராபுரத்தில் நகர திமுக சார்பில் பொங்கல் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 500பேருக்கு அமைச்சர் கயல்விழி சர்க்கரை பொங்கல் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைவருக்கும் சமத்துவ பொங்கல் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில், நகரச் செயலாளர் முருகானந்தம் ஏற்பாட்டில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், திமுக மகளிர் அணி சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



அப்போது அங்கு இருந்த மகளிர் அணி தொண்டர்கள் பொங்கல் பொங்கி வரும் போது குலவை சத்தத்துடன் கும்மி பாட்டும் பாடினர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் 500க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுகவினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...