75 வயது குடியரசு தின விழாவையொட்டி கோவையை சேர்ந்த எல்ஜி(ELGI) நிறுவனம் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில், 200 அடி கம்பத்தில் தேசியக்கொடி 24 மணி நேரமும் கம்பீரமாக பறப்பதற்கு ஏர் கம்ப்ரசர் பொருத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம் என்று எல்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயராம் வரதராஜ் கூறியுள்ளார்.


கோவை: எல்ஜி(ELGI) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.நம் இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடக உள்ளது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.அதே போல குடியரசு தினம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிக்கும் மற்றும் கொண்டாடும் நாளாகும்.இந்த நாட்களில் இந்திய பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாடப்படும். இது மட்டுமல்லாமல் மத்திய ரயில் நிலையம், விமான நிலையம், மாநில ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடிகள் தினந்தோறும் ஏற்றபடும்.



இதனிடையே உயர பறக்க விடப்படும் இந்த தேசிய கொடிகள் ஒரு சில நேரங்களில் காற்று இல்லாமல் கம்பீரமாக காணப்படாமல் சுருண்டு கிடக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு 75 வயது குடியரசு தின விழாவையொட்டி கோவையை சேர்ந்த காற்று நிறுவனமான எல்ஜி(ELGI)நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து இன்று வெள்ளிக்கிழமை காலை 12 மணி அளவில் எல்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில், சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில், 200 அடி கம்பத்தில் தேசியக்கொடி 24 மணி நேரமும் கம்பீரமாக பறப்பதற்கு ஏர் கம்ப்ரசர் பொருத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். இது வியாபாரத்துக்கு அல்ல. இது ஒரு கண்டுபிடிப்பு மட்டுமே. இந்த திட்டத்தின் செயல்முறைகளை யார் கேட்டாலும் அவர்களுக்கு கொடுக்க தயாராக உள்ளோம். மேலும் இந்த கொடிகளை பறக்கும் முறைகளை தான் இந்திய நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...