உடுமலை அருகே குழிப்பட்டியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக் கட்டைகளை கடத்த முயன்ற நான்கு பேர் கைது

குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி கடத்தியதை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் அரிய வகை தாவரங்கள் உயிரினங்கள் வனவிலங்குகள், சந்தன மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் குழிப்பட்டி பகுதியில் உடுமலை வனத்துறையினர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து உடுமலை வனத்துறைக்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ், ஆகியோர் சந்தன மரத்தை வெட்டியதாக ஒப்புக்கொண்டனர்.



இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள எட்டு கிலோ உயர் ரக சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், உடுமலை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர். உடுமலையில் சந்தன மரங்களை வெட்டி கேரளா கடத்த ஒன்று நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...