சின்னியகவுண்டம்பாளையத்தில் போர்ஜரி போக்குவரத்தில் ஈடுபட்ட லாரி ஓனர்- விபத்தால் ஏற்பட்ட விபரீதம்

விபத்தில் சிக்கிய லாரியின் எண்ணும், அங்குவந்த மற்றொரு லாரியின் எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பல்லடம் போலீசார் இரண்டு லாரிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இரும்பு கம்பெனி கருமண்ணை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலையில் பள்ளத்தில் இறங்கியது.

அப்போது இதை அறிந்த லாரி உரிமையாளரான பல்லடம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் மற்றொரு லாரியுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அதே எண் கொண்ட ஓனர் எடுத்து வந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அவர் இறங்கி விபத்தை பார்த்த போது இதனை கண்ட அப்பகுதி மக்கள் இந்த ஒரே எண்ணில் இரண்டு லாரிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதை தொடர்ந்து இரண்டு லாரிகளையும் கைப்பற்றிய பல்லடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த அந்தோணி திரவியம் ஆரோக்கியம் என்ற 33 வயது நபர் ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் யாருக்கும் எவ்வித பாதிப்பு இன்றி இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...