தமிழ்நாட்டில் முதன்முரையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மருத்துவ சுற்றுலாவிற்க்கு தரமான மருத்துவமனை சான்று


மருத்துவ பயணம் மற்றும்  நலமுடன் ஒரு சுற்றுலா தமிழகத்திற்கு முதல் முறையாக கோவையில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதல் சான்றிதழ்அ மெரிக்காவில் உள்ள எம்டிக்யுயுஏ MTQUA மருத்துவ சுற்றுலாவுக்கு உகந்த மருத்துவமைனகள், கிளினிக்குகள், ஏஜென்சிகள், சிறப்பு மருத்துவ சிகிச்சை மையங்கள், ரிசார்ட்டுகள் போன்றவைகளை ஆராய்ந்து, சான்றிதழ்களை வழங்கி வருகிறது. 

இதற்கான பயிற்சிப்பட்டறை, தர நிர்ணயம் மற்றும் முறைகளையும் வழங்கி வருகிறது. உலகில் மிக சில இடங்களில் மட்டுமே உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் சார்ந்த கல்விமுறைகள் கற்பித்தல் உள்ளன. ஆதாரப்புர்வமான தரநிர்ணயங்களின் அடிப்படையில், மருத்துவ சுற்றுலா பயணத்துக்கான வசதிகளை தரும் நிறுனங்களை தேர்வு செய்து சான்று வழங்குகின்றன. தகவல் தொடர்பு, இயக்கம், பண்பாடு, கலாச்சாரம், சந்தைப்படுத்துதல், இணைய பயன்பாடு, தனிமை காப்பு போன்ற வாடிக்கையாளர்கள் சேவைகளை மதிப்பீடு செய்கிறது. மருத்துவம் மற்றும் சேவை அளிப்போர் தர நிர்ணயத்தின் அளவுக்கோ, அதை விட மேலாகவோ செயல்படுவோருக்கு சான்றுகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிறுவனம், சமீபத்தில் மருத்துவ சுற்றுலா தொடர்பாக உலகத்தரத்திலான பயிற்சி தரவும் சான்றிதழ்  வழங்கவும் புதிய திட்டத்தை உருவாக்கியது.

மருத்துவ பயணம் மற்றும் சுகாதார நலச்சுற்றுலா தர குட்டமைப்பின் நிறுவனர் ஜூலி மன்ரோ பேசுகையில், “மருத்துவ சுற்றுலா பயணிகள், நம்பகமான அளவில் சிகிச்சை தரும் நிறுவனங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குவோரை நாடுகின்றனர். பிற நாடுகளில் தங்களது பாதுகாப்பு, மற்றும் சிறப்பான சிகிச்சை பற்றியும் உறுதியை அளிக்க வேண்டுகின்றனர்.  சிகிச்சை தரும் டாக்டர்களை பற்றியும், மருத்துவமனையின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் சொந்தமாக விசாரித்து அறிய வேண்டியள்ளது. இத்தகைய விசாரணையை அவர்கள் மேற்கொள்வது மிகவும் கடினமானது. இந்நிலையில் சர்வதேச அளவில் சான்று பெற்ற ஆலோசகரால் செய்ய முடியும். மருத்துவ சுற்றுலா துறையில் சான்று வழங்குவது ஒரு மகத்தான மைல்கள் என்றே சொல்லலாம். மாற்று முறை மருத்துவம் விரும்புவோருக்கும் தேடுவோருக்கும் இது ஒரு சிறப்பான வழிகாட்டுதல்," என்றார்.

MTQuA நிறுவனர் மற்றும் தலைவர் ஜூலி டபிள்யு மன்ரோ,  அமெரிக்கா நிதி நிர்வாக முதுநிலை ஆலோசகர்   ஜெனட் எம் கெட்டஸ் ஆகியோர் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 3 நாட்களாக இங்குள்ள வசதிகளை ஆராய்ந்து சான்று வழங்கியுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டிலேயே இத்தகைய சான்றிதழ் பெறும் முதல் மருத்துவமனையாக திகழ்கிறது.  சான்றிதழை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை வர்த்தக அலுவலர் சுவாதி ரோஹித் பெற்றுக் கொண்டார். மருத்துவமனை செயல் அதிகாரி சி.வி ராம்குமார், டீன் சுகுமாறன், மருத்துவ இயக்குனர் டாக்டர் ஐசக் மோஸஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...