போத்தனூர் - பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்ட அகலரயில் பாதையில் இன்று இறுதி கட்ட சோதனை ஓட்டம்



போத்தனூர் - திண்டுக்கல் அகலரயில் பாதை திட்டத்தின் இறுதி கட்டமாக போத்தனூர் பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்ட பாதையில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஓப்புதல் அளித்த பின்னர் விரையில் போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில் சேவையானது துவங்க இருக்கின்றது.



கோவை போத்தனூரில் இருந்து திண்டுக்கல் வரையில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர் போரட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு திண்டுக்கல்  - பொள்ளாச்சி - போத்தனூர் , பொளாச்சி - பாலக்காடு அகல ரயில் பாதைக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இந்த திட்டமானது பலகட்டமாக பிரித்து பணிகள் நடைபெற்றது. திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி - பாலக்காடு பணிகள் முடிவடைந்த நிலையில் பொள்ளாச்சி போத்தனூர் வரையிலான  40 கிலோ மீட்டர் தூர பணிகள் மட்டும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போத்தனூர் பொள்ளாச்சி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரயில்வே தெற்கு வட்ட பாதுகாப்பு ஆணையர் மனோகரன் சோதனை ஓட்டத்தினை ஆய்வு செய்தார். 

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போத்தனூர் பொள்ளாச்சி இடையிலான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் தொழில்நுட்ப ரீதியில் ரயில் பாதையில் வேகப்பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டு  மத்திய ரயில்வே துறைக்கு அறிக்கை அனுப்பட இருப்பதாகவும் மனோகரன் தெரிவித்தார். இதன் பின்னர் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யும் என தெரிவித்த அவர், சுமார் 340 கோடி மதிப்பீட்டில் இந்த போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டம் முடிவடைந்து இருப்பதாகவும், தென்மாவட்டங்களுக்கு செல்ல இந்த வழித்தடம் முக்கியமானதாக இருக்கும் என  ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்தார். 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...