கோவை மாநகரில் விரைவில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ள நிலையில், கிளாசிக் போலோ ஆடையகம் சார்பில் இயற்கை முறையில் தயாரித்த பைகள் அறிமுகமாகின்றன. முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் ஆன துணிப்பைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவுள்ள நிலையில் இதற்கான அறிமுக விழா நாளை, 'மை ஷாப்பிங் மை பேக்' கண்காட்சியில் நடைபெற உள்ளது.

இது குறித்து கிளாசிக் போலோ ஆடையகத்தை கோவை மாவட்டத்தில் தனி உரிமை எடுத்திருக்கும் ரதிஸ் குமார் கூறியதாவது:-
நாங்கள் அறிமுகப்படுத்த உள்ள பயோ க்ரேடபில் துணிப்பைகள் பிளாஸ்டிக் கலப்படம் இன்றி முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த பைகளை 'ட்ரு க்ரீன்' என்ற நிறுவனம் எங்களுக்கு தயாரித்து வழங்குகிறது.
சோளம், உணவுபொருட்கள் மற்றும் நார் பொருட்களின் பாக்டீரியாக்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பைகள் சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காது.
மேலும், இந்த க்ரீன் பேக் குறைந்தபட்சம் சில நாட்களுக்கு பிறகு தானாக மக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) இந்த புதிய துணிப்பையை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் வெளியிட இருக்கிறோம்.
கோவை மாவட்டத்தில் இது போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் முதல் க்ரீன் பேக் எங்களுடையது என்பதில் பெருமையடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.