குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசிய கொடியேற்றி மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிகளுக்கு பொன்னாடை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கும், மாவட்டத்தில் 39 போலீசாருக்கும் முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து 59 பயனாளிகளுக்கு, ரூ.61.82 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கும், மாவட்டத்தில் 39 போலீசாருக்கும் முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணியற்றிய 298 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.



இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை, வருவாய்த்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு நலச்சங்கங்கள், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 82 ஆயிரத்து 972 நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதே போல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசிய கொடியேற்றி வைத்தார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...