இந்திய அரசியலில் நிதீஷ்குமார் பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக இருக்கிறார் -திருப்பூரில் தமிமுன் அன்சாரி பேட்டி

பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்தார். தமிழக முழுவதும் செய்தியாளர்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணையும் இணைப்பு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்த கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். தமிழக முழுவதும் செய்தியாளர்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பீகார் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசிய அவர் நிதீஷ் குமார் பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக மாறி இருக்கிறார் எனவும், நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்த நிலையில் அதில் இடம்பெற்றிருந்த நிதீஷ்குமார் 18 மாதங்களுக்கு முன்பு எந்த கூட்டணியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தாரோ, மீண்டும் அரசியல் சுயலாபத்திற்காக அதே கூட்டணியில் இணைந்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக மாறி இருப்பதை உணர்த்துவதாகவும், அவர் மேற்கொண்டு இருப்பது ஜனநாயக அவமானம் எனவும், பீகார் மக்கள் அவரையும் அவரது கட்சி சார்ந்த கூட்டணியும் தனிமைப்படுத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் மக்கள் ஆன்மீக நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நிலையில் அதை அரசியலாக பாஜக பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டணி நிலைப்பாடு என்பதை பிப்ரவரி 10ஆம் தேதி திருச்சியில் நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி நடத்தப்பட உள்ள மாபெரும் சிறை முற்றுகை போராட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும், தமிழகத்தில் திராவிட கழகங்கள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைந்திட வேண்டும் என்ற நிலையில் கூட்டணிக்கு அழைப்பது என்ற முறையை தவிர்த்து பாரதிய ஜனதா கட்சி அதிமுகவை மிரட்டல் விடுத்து அழைக்கும் போக்கு தவறானது எனவும், தேர்தலுக்கு முன்னதாகவே தனது அராஜக போக்கை துவக்கி விட்டனர்.

இவர்களை தமிழக மக்கள் அடையாளம் காண வேண்டும். நாட்டு மக்கள் இவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...