செந்தூர் எலைட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மீது கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார்

மனைப்பிரிவின் அங்கீகாரத்தை ரத்து செய்து, ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்படும் ஊராட்சி செயலாளரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை சீரபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார்.



இவரது விவசாய பூமிக்கு அருகில் செந்தூர் எலைட் டெவலப்பர்ஸ் என்ற பெயரில் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் லே அவுட்டுகள் கட்டப்பட்டுள்ளது.



இந்நிலையில் லே அவுட் காரணத்தினால் மழைக்காலங்களில் வரும் மழைநீர் போதிய வடிகால் வசதி கட்டமைப்பு இல்லாமலும் பொதுமக்களால் வெளியேற்றப்படும் கழிவு நீர், குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் போன்றவை நேரடியாக பழனிச்சாமியின் விவசாய பூமிக்குள் வந்து சேர்வதாகவும், இதனால் விளை நிலங்கள் மாசடைவதாகவும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த பொழுதும் முறையான நடவடிக்கை இல்லை என கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஜன.29) மனு அளித்தனர்.



மேலும் லே-அவுட் அமைத்த நபர்களோடு கைகோர்த்துக்கொண்டு சீரபாளையம் ஊராட்சி செயலாளர் செயல்பட்டு வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்கள், அந்த மனைப்பிரிவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து செயல்படும் ஊராட்சி செயலாளரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...