சென்னை ஆவடியில் நடைபெற்ற முய் தாய் எனும் பாக்சிங் போட்டியில் 15 பதக்கங்களை பெற்று கோவை மாணவர்கள் அசத்தல்

முய் தாய் எனும் பாக்சிங் போட்டியில் எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று மாணவர்கள் அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.


கோவை: எலும்பு மூட்டுக்களின் கலையாக பார்க்கப்படும் முய் தாய் சண்டை கைமுட்டிகள், முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் தாடைகள் கொண்டு பாக்சிங் வகை போட்டியாக நடைபெறுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த கலைகளை தற்போது மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கற்று வரும் நிலையில், மாநில, தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச்சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான போட்டி அண்மையில் சென்னை ஆவடியில் நடைபெற்றது.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். வயது, எடை, ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் கோவை "ஆக்டகன் ஃபைட்ஸ்" கிளப்பை சேர்ந்த 15 பேர் கலந்து கொண்டனர்.



இதில் கலந்து கொண்ட அனைவரும் முறையே எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், ஃபெரோஸ் பாபு, சபரி, சிக்கந்தர் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் போட்டியாக முய் தாய் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகளை இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் பாக்சிங் போன்ற போட்டிகளுக்கு தனி அரங்கம் அமைந்துள்ளது போல் இந்த போட்டிகளுக்கும் அரங்கம் அமைத்து தர அரசு முன் வரவேண்டும் என பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...