நில அளவை தகவல்கள் பற்றி அறிய தமிழ் நிலம் மொபைல் செயலி - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜன.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை, www.tnlandsurvey.tn.gov.in என்ற இணைய தளத்தை, NIC மூலம் உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்துடன் 'தமிழ் நிலம்' என்கிற மொபைல் செயலி இணைக்கப்பட்டிருக்கிறது.

இதில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான, இணைய வழி சேவை தமிழ் நிலம் Citizen Portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் - ஊரகம் மற்றும் தமிழ்நிலம் - நகரம் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக, மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க 'அ' பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விபரங்களை எங்கிருந்தாலும் அறியும் வகையில், www.eservices.tn.gov.in என்ற இணைய தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய, வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சிகளின் விபரங்கள், இத்துறையின் சுற்றறிக்கைகள், அரசாணைகள் மற்றும் பரப்பளவு போன்றவற்றை அறியலாம்.

மேலும் பொதுமக்கள் நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...