கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்ட கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் மூன்று தங்கம், 5 வெள்ளி , 17 வெண்கல பதக்கம் வென்று அசத்தினர். வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை: குஜராத் மாநிலத்தில் 13 வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கோவா, குஜராத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கட்டா, குமித்தே என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கராத்தே போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், கேடட், சீனியர் அடிப்படையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்ட கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் மூன்று தங்கம், 5 வெள்ளி , 17 வெண்கல பதக்கம் வென்று அசத்தினர். வெற்றி பெற்று தற்போது கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து இதில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...