சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தாராபுரத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

பயணத்தின்போது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும், வாகனம் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்தாமல் இருக் வேண்டும், போக்குவரத்து சிக்னலை கவனித்து வாகனத்தை இயக்க வேண்டும் என்பன குறித்து பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

'சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு' என்ற கருப்பொருளை மையப்படுத்தி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.



இதில் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கரூர் சாலை, அலங்கியம் சிக்னல், உடுமலை ரவுண்டானா, பேருந்து நிலையம், அமராவதி ரவுண்டானா, புறவழிச் சாலை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதில், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது, போக்குவரத்து சிக்னலை கவனித்து வாகனத்தை இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், முன்னதாக சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் குற்றவியல் நடுவர் பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மூலனூர் தாராபுரம் காவல் ஆய்வாளர் அருள், தாராபுரம் காவல் ஊதவி ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...