பிப்ரவரி 6 முதல் 27- ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06035), அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவை-சென்னை இடையே பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்துடன் இந்த ரயிலின் சேவை முடிவடைய உள்ள நிலையில் பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிப்ரவரி 6 முதல் 27- ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06035), அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.
இதேபோல, மறுமார்க்கமாக பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும் கோவை-சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்:06036), அன்று இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
மேலும் இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.