குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த முதல்வருக்கு கு.இராமகிருட்டிணன் நன்றி

தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை தந்தை பெரியார் திராவிட கழகம் வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.


கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளாவது, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், திபெத், போன்ற வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக நிறைவேற்றும் சட்டம் அந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும், இலங்கையில் இருந்து வரும் தமிழ் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று புதிய குடியுரிமை திருத்த சட்டம் சொல்கிறது.

இலங்கைக்கு சென்று ஈழத் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் வீடு கட்டித் தருகிறோம், சாலை அமைத்து தருகிறோம், அவர்களுக்கு புனரமைப்பு பணிகளை செய்து தருகிறோம் என்று நாடகம் நடத்தும் மோடியின் பாஜக அரசு அதே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை இல்லை என்று அறிவிக்கின்றது.

கிறிஸ்துவ நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்லும் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவ நாடுகளில் குடியேறிய பிழைப்புக்காக சென்ற பார்ப்பனர்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆகவும், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும் கிறிஸ்தவ நாடுகள் அனுமதித்திருக்கிறது. ஆனால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...