கைகாட்டி என்ற இடத்தில் குடியிருப்புக்கு மத்தியில் எழுப்பப்பட்ட சுவர் – இருதரப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கால்நடைகளிடம் இருந்து பாதுகாப்புக்காக மட்டுமே குடியிருப்புக்கு நடுவில் அமைக்கப்பட்ட சுவர் அமைப்பட்டதாக விஐபி நகர் மக்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் இது தீண்டாமை சுவர் என்று தேவேந்திரன் நகர் மக்கள் புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே கைகாட்டி என்னும் இடத்தில் விஐபி நகர் மற்றும் தேவேந்திரன் நகர் ஆகிய இரண்டு குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இதில் வெவ்வேறு சமூகத்தினர் வசித்து வரக்கூடிய நிலையில் விஐபி நகர் பகுதியில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில்,

விவசாய நிலத்திற்கு கால்நடைகளிடம் இருந்து பாதுகாப்பு கருதி 380 மீட்டர் தூரத்திற்கு தனக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சுவர் எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் அதனை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தீண்டாமை சுவர் என பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக தங்கள் பகுதியைச் சார்ந்தவர்களின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் பகுதியில் குடியிருந்து வருகின்ற நிலையில் தங்கள் குடியிருப்போர் நலச் சங்கத்திலும் அவர்கள் பொறுப்புகளில் பதவி வைத்து வருகின்றனர். ஆனால் சிலர் சுயநலத்திற்காக அதனை தீண்டாமை சுவர் என பரப்பி வருகின்றனர். அரசு அதிகாரிகளும் தீண்டாமை சுவரையற்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் இறுதி முடிவுக்கு கட்டுப்பட இருக்கிறோம். அதுவரை தாங்கள் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு சுவரை தீண்டாமை சுவர் என பெயரிடக் கூடாது எனவும் , அவ்வாறு அழைக்கும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் , விஐபி நகர் பகுதியைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் உட்பட பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதேபோல், தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் விஐபி நகர் பகுதி வழியே செல்லக்கூடாது என்பதற்காக சுவர் எழுப்பப்பட்டு இருப்பதாக புகார் மனு அளித்தனர். ஏற்கனவே இதை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், தொடர்ந்து சுவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் தங்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேவேந்திரன் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...