கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் போலீசார் விழிப்புணர்வு

ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே கொத்தடிமை ஒழிப்பு தினத்தை பற்றியும், கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.


கோவை: பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமை முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவையில் மாநகர காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி கோவை ரயில் நிலையத்தில் இன்று (பிப்.8) நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகர காவல்துறையினர், ரயில்வே காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே கொத்தடிமை ஒழிப்பு தினத்தை பற்றியும், கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் அங்கிருந்த வடமாநில மக்களிடமும் ஹிந்தி மொழியில் உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



பின்னர் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள், குழந்தைகளின் உரிமைகள், குழந்தை தத்தெடுத்தல் விவரங்கள், குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்கள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...