காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் My V3 Ads நிறுவன உரிமையாளர் கோவையில் கைது

புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் My V3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட அவரது ஆதரவாளர்கள், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: மை வி3 நிறுவனம் விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று (பிப்.10) சத்தி ஆனந்த் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.



அப்போது சத்தி ஆனந்த் கூறுகையில், ''மை வி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாகவும், தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன்.'' என்றார்.



தொடர்ந்து, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் சக்தி ஆனந்த் உட்பட அவரது ஆதரவாளர்கள், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...