உடுமலையில் செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

செண்டுமல்லி பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும். நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள புங்கமுத்தூர், தளி, பாப்பனூத்து, பெரியகோட்டை, ராஜாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை சீசனுக்காக கோழிகொண்டை, செண்டு மல்லி உட்பட பல்வேறு பூ சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த அளவு தண்ணீர் தேவை, சாகுபடி செலவு குறைவு, முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் பரவலாக ஆண்டு முழுவதும் பகுதிகள் விவசாயிகள் சாகுபடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை பகுதியில் செண்டு மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாங்கி வருகின்றோம். ஏக்கருக்கு 12,000 நாற்றுகள் வரை நடவு செய்து 60 நாட்களில் பூ அறுவடையை துவக்கலாம். நடப்பு சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம்.

பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். விசேஷ நாட்களில் மட்டும் பூக்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றது. விசேஷம் இல்லாத நாட்களில் பூக்கள் வாங்காமல் கருகும் அபாயம் உள்ளதால் அரசு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...