பட்டா வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் குறிச்சி உப்பிலிதிட்டு மக்கள் மனு

மதுக்கரை தாலூக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுவரை இந்தப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்காததால், பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.


கோவை: 50 வருடங்களுக்கு மேலாக மதுக்கரை தாலுக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் வசித்து வரும் நிலையில் தங்களுக்கு இதுவரை பட்டா வேண்டும் என பலமுறை மனு அளித்தும் பதில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் 200 குடும்பங்களை சார்ந்த பிரதிநிதிகள் இன்று (பிப்.12) நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இடம் மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், கோவை மாவட்டம், மதுக்கரை தாலூக்கா, குறிச்சி, உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஆதார், மின் இணைப்பு, ரேசன் கார்டு, வீட்டு வரி, கேஸ் இணைப்பு என அனைத்தும் பல வருடங்களாக இங்கு குடியிருப்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் நாங்கள் எங்கள் வீடுகளுக்கான பட்டாவானது இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்படவில்லை. நாங்கள் வயதானவர்கள், குழந்தைகள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல முறை நேரில் முறையிட்டும் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லாமல் போய் விட்டது.

ஆனால் எங்கள் பகுதியில் உள்ள க.ச.எண். 149க்கு பட்டா அளித்ததனை தாங்கள் கருத்தில் கொண்டு அதனை மேற்கோள்காட்டி மீதமுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தாங்கள் முன் வந்து பட்டா அளிக்குமாறு மிகப் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...