கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையில் வழிபட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நேற்று (பிப்.12) முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறை அனுமதி வழங்கியது.


கோவை: கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார், 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

மலை உச்சி மீது அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை சுயம்பு வடிவில் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வனத்துறையினர் அதை மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் பக்தர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களை அனுமதிக்க வனத்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று (பிப்.12) முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறை அனுமதி வழங்கியது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...