கோவையைச் சேர்ந்த மீனாக்ஷி அரவிந்த், பொள்ளாச்சியைச் சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரியா ராஜகோபால் ஆகிய எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள் கோவையில் இருந்து லண்டனிற்கு காரிலேயே செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதன் துவக்க விழாவில் கோவை எஸ்என்ஆர் குழுமம் 'எக்ஸ்பிடி 2470' கொடியினை அசைத்து துவக்கி வைத்தது.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்,பி.வேலுமணி, அவினாசிலிங்கம் பல்கலைக் கழகதலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் பிரிஜேஸ், ரூட்ஸ் குரூப் ஆப் கம்பெனி தலைவர் கே.ராமசாமி, ராமகிருஷ்ணா மற்றும் எஸ்என்ஆர் மேலாண்மை அரங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, இப்பயணத்தை மேற்கொள்ளும் மூன்று பெண்களுக்கும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், எக்ஸ்பிடியன்ஸ் குழுவில் இருந்து இருசக்கர வாகன ஓட்டுநர்கள் எக்ஸ்பிடியன்ஸ் பெண்களை வழியனுப்பும் விதமாக பெருந்துரை வரை உடன் செல்லவுள்ளனர்.
அந்த பெண்கள், இந்தியா சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் நிரைவுபெற்றதின் நினைவாக 70 நாட்களில் 24 நாடுகளை கடக்கவுள்ளனர். மேலும், ரோட்டரி இந்தியன் லிட்ரசி மிஷன் சார்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தினையும் முன்வைத்து இப்யணத்தை மேற்கொள்கின்றனர்.
எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள் வரும் ஜுன் 5ம் தேதியன்று லண்டனை அடைய திட்டமிட்டுள்ளனர்.

இப்பயணத்தின் போது, கோவையில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிடியன்ஸ் பெண்களை புதுச்சேரி ஆளுநர் கிரன்பேடி அங்கிருந்து கொடியசைத்து அனுப்பிவைக்கவுள்ளார்.