வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்ததால் வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, நீரார்அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அணைகள் வறண்ட மண்மேடுகளாக காட்சியளிக்கின்றது.
வால்பாறையில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் மழை தொடங்கி 6 மாதங்களுக்கு விட்டுவிட்டு பெய்துவரும். இந்த ஆண்டு சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியில் 131 அடியைமட்டுமே எட்டியுள்ளது. இதனால் மாணாம்பள்ளி, சோலையார் அணையில் உள்ள 2 நீர் மின்நிலையங்களும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் கடைசியிலேயே சோலையார் ஆணை முழுகொள்ளளவை எட்டி 123 நாட்கள் முழுகொள்ளளவிலேயே இருந்த நிலையில் அணை மூன்று முறை திரந்து விடப்பட்டது.

2015-ம் ஆண்டும் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியதால் ஒரு முறை திறந்து விடப்பட்ட நிலையில் மழை குறைவால் நீர்வரத்து குறையத் தொடங்கியது.

ஆனால் இந்த ஆண்டு ஜுன் முதல் ஆண்டு இறுதி வரையிலும் அதிகமழை பெய்யாதிருப்பதால் வால்பாறை சோலையார் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையின் நீர்மட்டம் 3.34 அடியில் உள்ளது.