உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு – நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில், தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த பகுதிகளில் விலையும் தக்காளிகளை உடுமலை சந்தைக்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கேரள மாநிலம் மறையூர், மூணாறு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. மழைப்பொழிவு காரணமாக தற்பொழுது தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்து உள்ள காரணத்தால் தக்காளி தரமில்லாமல் மாறி மகசூல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் உடுமலை சந்தையில் தக்காளி விலை கடும் சரிவை செய்துள்ளது.

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில் தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

விவசாயிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக செடிகள் காய்ந்தும் காய்கள் வெளிர் நிறத்துக்கு மாறியும் பெருமளவு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விலையும் சரிந்து வருவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...