குண்டடத்தில் ரேக்ளா பந்தயத்தில் துள்ளி குதித்து சென்ற காளைகள் – உற்சாகத்துடன் பொது மக்கள் கண்டுகளிப்பு

200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் எரகாம்பட்டி நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் செம்மேகவுண்டன்பாளையம் சாலை முதல் வெறுவேடம்பாளையம் சாலை வரையில் 48 ஊர் கிராம மக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

போட்டியில் 400 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நேர ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயத்தில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

200 மீட்டர் போட்டிகளை சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் மற்றும் நந்தவனம்பாளையம் தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து ஆகியோரும், 300 மீட்டர் பந்தயங்களை குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், துணைத் தலைவர் மனோரஞ்சிதம் மகேஷ் ஆகியோரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்போட்டிகளில் 200 மீட்டர் பிரிவு 300 மீட்டர் பிரிவுகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு தங்ககாசு, நினைவு கோப்பை, நினைவுபரிசு, மெடல் ஆகியவற்றை 48 ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ரேக்ளா பந்தயத்தை காண குண்டடம், எரகாம்பட்டி, மேட்டுக்கடை, ருத்ராவதி, கள்ளிவலசு, பூளவாடி, தாராபுரம், பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தை கண்டுகளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...