கார்பைட் கற்கள், எலீசியம் இராசயன பொடி மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஐந்தரை டன் மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்கள் பறிமுதல்

கோவை உக்கடம் பகுதியில் கார்பைட் கற்கள் மற்றும் எலீசியம் என்னும் இராசயன பொடி மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஐந்தரை டன் எடையுள்ள மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கிருந்த கடைகளில் சப்போட்டா மற்றும் மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கற்கள் மற்றும் எலீசியம் என்ற இராசயன பவுடர் பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்று இடங்களில் சுமார் 5 டன் அளவிற்கு இருந்த மாம்பழங்கள், சப்போட்டா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு குப்பைகளில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

இது குறித்து பேட்டியளித்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய், தற்போது கோடைகாலம் என்பதால் மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பழ வியாபாரிகள் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்பைடு கற்களை பயன்படுத்துகின்றனர். 

இது போன்ற கற்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் கார்பைடு கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைப்பது தொடர்கிறது. தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எத்தீலின் என்ற பொடியை புதிதாக பயன்படுத்தி வருவதும் சோதனையில் தெரியவந்துள்ளது. 

இந்த பழங்களை சாப்பிடுவதன் காரணமாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் உட்பட பலவித நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது போன்ற சோதனைகள் மாவட்டம் முமுவதும் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...