கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மூன்று விவசாயிகள் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.


கோவை: கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் மூன்று பேர் தங்களது காரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று (பிப்.19) வந்தனர். பின்னர் பணி முடிந்து மூன்று பேரும் கருமத்தம்பட்டி செல்வதற்காக காரில் சென்றனர். அப்போது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காரின் உள்ளே சிக்கிய மூவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் மூவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். தொடர்ந்து பொதுமக்கள், போலீசார் உதவியுடன் காரை சாலை ஓரத்தில் தள்ளி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...