ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய கோரி கருங்காலி வலசு கிராமத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய கோரி தென்னந்தோப்பில் நின்று கொண்டு கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய கோரி கருங்காலி வலசு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னந்தோப்பில் நின்று கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சங்கரண்டாம்பாளையம் கிராமம் கருங்காலிவலசு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நின்று கொண்டு கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இயற்கை விவசாய அணி துணைச் செயலாளர் சங்கரன்பாளையம் தனபாலன், தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன். முன்னிலை வைத்தார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது, தற்போது சென்னையில் ரேஷன் கடைகளில் தேங்காய் விற்பனை செய்ய வலியுறுத்தி தற்போது நான்கு நாட்களாக போராட்டம் செய்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் உள்ள போராடிவரும் விவசாயிகள் அனைவருக்கும் ஆதரவாகவும் இந்த போராட்டம் நடத்துகிறோம்.

மேலும் இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆன 75/சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியாகும் அவலம் உள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பு, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. 100-க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30-க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

அதாவது ஒரு லிட்டருக்கு 70-ரூபாய் மானியம் கொடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க., 66-வது வாக்குறுதியாக தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தடை செய்து, நன்மை விளைவிக்கும் உள்நாட்டு எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 30- ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தென்னை விவசாயிகளாலும், விவசாய சங்கங்களாலும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்பனையை கொண்டு இருந்த தேங்காய் தற்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள். எனவே பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...