மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.401.57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 50 பணிகளும், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 250 கி.மீ அளவிற்கு நீர்வரத்துக் கால்வாய்களையும், ரூ.401.57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம், நல்லட்டிபாளையம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை (ஆழியாறு) யின் மூலம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்வரத்து கால்வாய்கள் குடிமராமத்துப்பபணிகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தவறியதால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



வருங்காலத்தில் நீர்நிலைகளை புணரமைத்து தண்ணீர் தேக்கி வைத்திடும் அளவிற்கு நீர்வள ஆதார மேலாண்மை மேம்படுத்திடவும், நீர்பயண்பாட்டை முறையாக ஒழுங்கு படுத்தவும், தற்போது இத்திட்டம் தொடங்கப்பட்டு, இச்சீரமைக்கும் பணி 14.03.2017 முதல் நமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொதுப் பணித்துறையின் மூலம் 50 நீர்வரத்துக் கால்வாய்கள், ரூ.231.51 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் நொய்யல், பவானி, ஆழியாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் சிற்றருவிகள் ஆகியவற்றிலுள்ள முதன்மை வாய்கால்களிருந்து வரும் துணை கால்வாய்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் மூலம் இப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் 1,29,137 ஏக்கர் பாசனப்பகுதிகளுக்கு நீர்தேக்கி பயன்படுத்தும் நிலை உறுவாகும். தற்பொழுது வடசித்தூர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் 2963 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு நீர்நிலை வாய்க்கால்களை சீர்செய்வதன் மூலம் தண்ணீர் வரத்துப்பகுதியிலிருந்து கடைமடை வரை நீர் சேதாரமின்றி சமச்சீராக வருவதன் மூலம் ஆங்காங்கே உள்ள சிறு குளங்கள் ஏரிகளுக்கு தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ள மிகப்பயணுள்ளதாக இருந்திடும்.

இதேபோல், மாவட்டத்தில் மற்றப்பகுதிகளிலுள்ள அனைத்துக் கால்வாய்களும் விடுபடாமல் சீரமைக்கப்படும். 

மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் மூலமாகவும், பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் அதே வேலையில், நீர்நிலை ஆதாரங்களை நிலை நிறுத்த ஏதுவாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலம் சுமார், 250 கி.மீ தூரத்திற்கு ரூ.170லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்துக்கால்வாய்கள் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 49 கண்மாய்களில் வரும் மழை காலத்தில் தண்ணீர் தேக்கி விவசாயப்பணிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் நிலை உறுவாக்கபட்டுள்ளது. இதேபோல், நடப்பு நிதியாண்டில் மற்றப்பகுதிகளிலும் நீர்வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கப்படும்.

எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சந்திரசேகரன், பொதுப்பணித்துறை ஆழியாறு வடிகால் கோட்ட செயற்பொறியாளர் முத்துச்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...