பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் குண்டம் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான மயான பூஜை நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தபட்ட பின்னர் கோவில் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20 -க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி வந்தனர். சயன கோலத்தில், மயான தேவதையின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.



பின்னர் மயான பூஜை நள்ளிரவு 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...