மேலப்பாளையத்தில் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடப்பதால், அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) 25-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடப்பதால், அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) 25-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) 26ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.