நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மண்ணரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சகாதேவன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நியாய விலைக் கடைகளில் அரசு அறிவித்தபடி அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலின்டர் விலையை கட்டுப்படுத்தவும் மற்றும் டீசல், பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், குன்னூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுதாகர், உதகை சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி, கோத்தகிரி பேரூராட்சி கழக செயலாளர் சந்திரக்குமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.