கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்(SSTA) கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (பிப்.26) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும் தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். அதன்படி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஊதிய குழுவின் செயல்முறைகளின் படி ஒரு குழுவிற்கு ஒரு அடிப்படை ஊதியம் தான் கொடுக்க வேண்டும் எனவும், ஆனால் ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு வகையான அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 8370 ரூபாய் ஊதியமும், அதன் பிறகு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 5200 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது என தெரிவித்த அவர்கள், இதனால் சுமார் 3000 ரூபாய் க்கு மேல் முரண்பாடு ஏற்படுவதாகவும், இந்த ஊதிய முரண்பாட்டை உடனடியாக கலைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தவர்கள் வேலை நாட்களில் போராட்டம் நடத்துவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...