தீத்திபாளையத்தில் மயில்சாமி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள், சின்ன வெங்காய பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: தொண்டாமுத்தூரில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல வகையில் கையாண்டும் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. கோவை தீத்திபாளையம் மயில்சாமி கவுண்டர் என்பவர் தோட்டத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் சின்ன வெங்காய நடவு காட்டில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

60 நாட்கள் ஆன சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாய சங்கத்தின் நிர்வாகிகள், தொண்டாமுத்தூர் விவசாயிகள் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.