கோவை எரு கம்பெனி பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் திடீர் போராட்டம்

கடந்த சில மாதங்களாக மீண்டும் எரு கம்பெனி பகுதியில் கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பைகள் தரம் பிரிப்பது மற்றும் தீ வைத்து எரிப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட எரு கம்பெனி பகுதியில் சில வருடத்திற்கு முன்பு குப்பை கிடங்கு செயல்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்பகுதி மக்களின் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு குப்பை கிடங்கு வெள்ளலூர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் எரு கம்பெனி பகுதியில் கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பைகள் தரம் பிரிப்பது மற்றும் தீ வைத்து எரிப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் அதிலிருந்து ஏற்படும் காற்று மாசு, துர்நாற்றம் காரணமாக பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்வதுமாக இருந்து வருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (மார்ச்.1) ஒன்று திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போதும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மீண்டும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...