சீரான குடிநீர் வழங்காத கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொங்காளியூர் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பேரூராட்சி அதிகாரிகள் இன்று மாலைக்குள் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை நேரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தேங்காய் பாறை பகுதிக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை 6.30 மணி அளவில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோட்டூர் பொங்காளியூர் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பேரூராட்சி அதிகாரிகள் இன்று மாலைக்குள் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை நேரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...