புதுச்சத்திரத்தில் மின் மோட்டார், காற்றாலை நிறுவனங்களில் காப்பர் கேபிளை திருடிய 10 பேருக்கு கிராம மக்கள் தர்ம அடி

புதுச்சத்திரம், கோவிந்தாபுரம், பொன்னாபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழைய இரும்பு வியாபாரம் செய்வது போல் நடித்து வீடுகள், விவசாயிகளின் தோட்டங்கள், ஆளில்லாத காற்றாலை பகுதிகளில் சென்று மின்சார மோட்டார், காப்பர் ஒயர்களை திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் 500,க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட காற்றாலை நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் தோட்டத்தில் மின் மோட்டார்கள் மற்றும் காப்பர் ஒயர்களும் தொடர்ந்து திருடு போனது. அதேபோல காற்றாலை நிறுவனங்களில் உள்ள விலை உயர்ந்த காப்பர் கேபிள்களும் திருடு போய் வந்தன. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் ஒரு குழு அமைத்து திருடர்கள் யார்? என தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பல் மின் மோட்டார்கள் கழட்டி கொண்டிருந்தனர். அப்போது தனது உறவினர் தோட்டத்தில் சம்பந்தமில்லாத நபர்கள் வேலை செய்வதை பார்த்த விவசாயி தனது உறவினருக்கு உங்கள் தோட்டத்தில் மோட்டார் வேலை செய்கிறீர்களா என போன் மூலம் தொடர்பு கொண்டு அவரைக் கேட்டபோது அவர் அப்படி யாரையும் நான் தோட்டத்திற்கு அனுப்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த விவசாயிகள் யார் அவர்கள் என சென்று பார்த்த போது நான்கு பேரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு கிராம மக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஓட்டம் பிடித்த 4 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்.



திருநெல்வேலி மாவட்டம் லிங்கபாண்டியன் மகன் கண்ணன் என்பவர் புதுச்சத்திரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் பழைய இரும்புகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக பிடிபட்ட நான்கு திருடர்களும் தெரிவித்தனர்.



இதனையடுத்து தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் புது சத்திரத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று பார்த்தபோது விவசாயிகளிடம் இருந்து காணாமல் போன மோட்டார் மற்றும் காப்பர் ஒயர்கள் போன்றவற்றை அடுக்கி வைத்திருந்தனர்.



இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கடையில் தங்கி இருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், பாலாஜி, சக்தி முருகன், கதிரேசன், கோபிகணேஷ், சக்திவேல், முத்துச்செல்வன், ராகுல், செல்வன், கண்ணன் உட்பட 10 பேரையும் பிடித்து 400,க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் திருடர்களை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

புதுச்சத்திரம், கோவிந்தாபுரம், பொன்னாபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட 30,க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழைய இரும்பு வியாபாரம் செய்வது போல பல்வேறு வீடுகள் விவசாயிகளின் தோட்டங்கள் ஆளில்லாத காற்றாலை பகுதிகளில் சென்று மின்சார மோட்டார் காப்பர் ஒயர்கள் ஆகியவற்றை திருடி ஒயர்களை தீயிட்டு கருக்கி அதிலுள்ள காப்பர் கம்பிகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் விவசாயிகள் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளை திருடி கறிக்கடைகளுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் ஆட்டுகளின் வாயில் துணியை வைத்து அடைத்து 50க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியதாக 10 திருடர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதனால் பல்வேறு கிராமங்களில் திருடிய 10 திருடர்களையும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தாராபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் 10 பேரும் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...