நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.03.2017) மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சுத்தமாகவும், பேணிபாதுகாப்பது மிக அவசியமாகும். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளோடு பொதுமக்களும் கைகோர்த்து நீர்நிலைகளை பேணிகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நீர்நிலைகளில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவது, பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் திட, திரவுக்கழிவுகள் கொட்டுவதென்பது தடுக்கப்பட வேண்டும். மேலும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் விதிகளின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், பொதுமக்கள் தங்களது பட்டா நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறுபவர்களின் மீது அவற்றிற்குண்டான அபாராதம் விதிக்கப்படும். தமிழக அரசு, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் தூய்மை படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. எனவே, பொதுமக்களும் குளங்களை பாதுகாக்கும் மற்றும் தூய்மைபடுத்தும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...