கோவையில் ரூ.40 ஆயிரத்திற்கு பதில் தவறுதலாக ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை அனுப்பிய நபர்- தலைமறைவான வட மாநில தொழிலாளர்கள்

கட்டுமான நிறுவனர் பாஸ்கரன் கடந்த மாதம் சம்பளம் போடும்பொழுது 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை தொழிலாளி சிவம் நாயக் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இந்த பணத்துடன் தலைமறைவாகியுள்ள வடமாநில தொழிலாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் கட்டுமான அலுவலகம் வைத்திருப்பவர் பாஸ்கரன். இவரது நிறுவனத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிவம் நாயக், பிரபாகரன் நாயக் ஆகிய இருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பாஸ்கரன் கடந்த மாதம் சம்பளம் போடும்பொழுது 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை சிவம் நாயக் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தவறுதலாக பணம் அனுப்பியதை உணர்ந்த பாஸ்கரன் உடனடியாக சிவம் நாயக்கை அழைத்து அந்த பணத்தை திங்கட்கிழமை வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார்.



இந்நிலையில் இன்று காலை அவர் சைட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது சைட்டில் அவர்களை காணவில்லை. பின்னர் இது குறித்து விசாரிக்கும் பொழுது நேற்று இரவே அவர்கள் அவர்களது ஊருக்கு புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பாஸ்கரன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.



புகாரைத் தொடர்ந்து வங்கி கணக்கு முடக்கப்பட்டு ஆய்வு செய்ததில் ஏற்கனவே ஒரு லட்சத்தை அவர்கள் எடுத்து கொண்டு விட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பாஸ்கரன் கூறுகையில், இத்தனை நாட்களாக வேலை செய்துவிட்டு துரோகம் இளைத்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், தன்னால் அந்த நம்பிக்கை துரோகத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....