கோவையை அடுத்த அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட செங்காளிபாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் கடையை அப்பகுதியிலிருந்து அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்ததால் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பிரபாகரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், அப்பகுதியிலிருந்து கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் கடையை தற்காலிகமாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.