உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தாராபுரத்தில் கலெக்டர் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தண்ணீர் திறப்பது பற்றி எந்த பதிலும் தெரிவிக்காமல் காரில் சென்று அமர்ந்து கொண்டதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் 240 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் நடைபெற்று.

இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு பாசன விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜை சந்தித்து உப்பாறு அணைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்கும் நடவடிக்கை தொடர்பாக சந்தேகங்களை கேட்பதற்காக விவசாயிகள் மண்டபத்தில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் பேச முற்பட்டனர்.



அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் காரில் சென்று அமர்ந்து கொண்டார்.

அப்போது ஆத்திரம் அடைந்த உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் சிவக்குமார் தண்ணீர் கொடுங்கள், விவசாயிகளின் குறைகளை கேட்டுச் செல்லுங்கள் என மாவட்ட ஆட்சித் தலைவரின் காரை வழிமறித்து கேட்டார்.

அப்போதும் அங்கு வந்திருந்த 50 விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டு கலெக்டரின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.



அதனைத் தொடர்ந்து அங்கிருந்து டி.எஸ்.பி. கலையரசன் தலைமையிலான போலீசார் அவரை குண்டுகட்டாக இழுத்துச் சென்று போலீஸ் எடுத்து வந்த பேருந்தில் ஏற்ற முயன்றனர். அதற்கு விவசாயிகள் ஏற மறுத்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...