தமிழக பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் உருவாக்க வேண்டும் என தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் சட்ட ரீதியான அணுகுமுறையும் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர். ராஜா செல்வகுமார் மாநாட்டை தொடங்கி வைத்து வரவேற்று பேசினார்.


அதனைத் தொடர்ந்து மாநாடில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் பிசியோதெரபி மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் டாக்டர் ஐன்டீன் கலந்து கொண்டு பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்தும் அதனை சரி செய்யும் சட்ட ரீதியான அணுகு முறைகள் குறித்தும் விவாதித்தார்.

இதனைத்தொடர்ந்து பிசியோதெரபி மருத்துவத்தை ஆவனபடுத்தும் முறை குறித்து டாக்டர். ராம் பிரகாஷ் உரையாற்றினார். இதில் தமிழக பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் உருவாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிசியோதெரபி சிகிக்சையை சேர்க்க வலியுறுத்துவது, பிசியோதெரபி மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



மாநாட்டில் பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்றிய சென்னையை சேர்ந்த டாக்டர் ஹரிஷ் குமார்-க்கு டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் நினைவு விருதும், ஈரோட்டை சேர்ந்த டாக்டர். விஜயராஜ்-க்கு பிசியோ எக்சலென்சி விருதும் வழங்கி கௌரவிக்கபட்டனர்.

இறுதியாக பிசியோதெரபி மருத்துவம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் வெளியிடப்பட்டது. நிறைவாக கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்.ராஜேஷ் கண்ணா நன்றி தெரிவித்தார்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...